தேசியம்
செய்திகள்

போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும்: Ottawa காவல்துறை தலைவர்

Freedom Convoy எனப்படும் போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும் என Ottawa காவல்துறை இடைக்கால தலைவர் Steve Bell தெரிவித்தார்.

Ottawa நகரின் மூன்று வார ஆக்கிரமிப்பு மீதான விசாரணை வரவிருக்கும் மாதங்களுக்கு தொடரும் என அவர் தெரிவித்தார்

ஆர்ப்பாட்டக்காரர்கள் Ottawaவின் தெருக்களை விட்டு வெளியேறும்போது விசாரணை முடிவடையாது என சனிக்கிழமைக்கு காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Bell கூறினார்

Ottawa தெருக்களில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதில் இருந்து 170 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சனிக்கிழமை காலை நான்காவது வார இறுதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன.

ஆனாலும் கடந்த வாரங்களில் காணப்பட்ட ஏனைய ஆர்ப்பாட்டங்களை விட மிகச் சிறிய அளவில் இருந்தது.

அதே நேரத்தில் முன்னைய வாரங்களை விட காவல்துறை அதிகாரிகள் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தனர்.

இதேவேளை பாதுகாப்புக் காரணங்களால் வெள்ளிக்கிழமை மூடப்பட்ட பின்னர், சனிக்கிழமை காலை அவசரகால நிலைப் பிரகடனத்தை உறுதிப்படுத்தும் பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பித்தது.

திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அவசரகாலச் சட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து குறைந்தது 76 நிதிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என சனிக்கிழமைநடைபெற்ற ஒரு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கூறினார்.

அந்த நடவடிக்கைகளால் $3 மில்லியனுக்கும் அதிகமான நிதி பாதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் June 26?

Lankathas Pathmanathan

மீண்டும் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் Ottawa

Lankathas Pathmanathan

Leave a Comment