தேசியம்
செய்திகள்

Markham நகரில் வாகனம் மோதியத்தில் தமிழர் ஒருவர் காயம்

Markham நகரில் தமிழர் ஒருவர் காயமடைந்த விபத்துக்கான சாட்சிகளை காவல்துறையினர் கோருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (11) Markham நகரில் (16th and Mingay Ave) வாகனம் மோதியதில் பாதசாரி உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பாதசாரி கடுமையான காயங்களுக்கு உள்ளன நிலையில் York பிராந்திய காவல்துறையின் புலனாய்வாளர்கள் விபத்திற்கான சாட்சிகளைத் தேடி வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 54 வயதான நபர் ஒரு தமிழர் என தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் வாகன ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருப்பவர்களோ அல்லது அப்பகுதியில் இருந்து dashcam video வைத்திருப்பவர்களோ தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது

இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது.

 

 

 

Related posts

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பரிந்துரை

Gaya Raja

Ottawa போராட்டம் காரணமாக 36 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இழப்பு!

Peel பிராந்திய பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படுகின்றன

Gaya Raja

Leave a Comment