சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தமிழர் கூடுதல் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Whitby நகரை சேர்ந்த 33 வயதான கார்த்திக் மணிமாறன் மீது இந்த குற்றச் சாட்டுகள் பதிவாகின
மணிமாறன் மீது முதலில் 2021ஆம் ஆண்டு சிறுவர் ஆபாச படங்கள் வைத்திருந்தது, குழந்தைகளின் ஆபாசப் படங்களை விநியோகித்தது உட்பட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
புதன்கிழமை (16) Durham காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் படி இவர் மீது குழந்தைகளின் ஆபாச படங்களுடன் தொடர்புள்ள மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் விடுத்தல், குற்றவியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விசாரணையில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவியுடன், புலனாய்வாளர்கள் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளை அடையாளம் கண்டுள்ளனர்.