தேசியம்
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டு  முறையினை நீக்குவதற்கான திட்டம் ஆராயப்படுகிறது: முதல்வர் Ford

Ontarioவின் தடுப்பூசி கடவுச்சீட்டு  முறையினை நீக்குவதற்கான திட்டம் குறித்து ஆராய்வதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
மீண்டும் திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வணிகங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் மிக விரைவில் அகற்றுவதற்கான நிலையில் Ontario உள்ளதாக வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ford கூறினார்.
தடுப்பூசி  கடவுச்சீட்டு  முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்கள் தொடரும் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் Ford கூறினார்.
அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் வரவிருக்கும் நாட்களில் மறுபரிசீலனை செய்யவுள்ளதாக Ontarioவின் தலைமை மருத்துவர் நேற்று கூறியிருந்தார்.
சில பொது சுகாதார நடவடிக்கைகளை எவ்வாறு  நீக்குவது என்பது குறித்து அடுத்த வாரத்தில் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கலாம் எனவும் Dr. Kieran Moore வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

Related posts

செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பத்து பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி!

Lankathas Pathmanathan

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள் வெளியேற உதவும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment