Ontarioவில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford அவசரகால நிலையை அறிவித்தார்
Ontarioவின் முக்கிய எல்லைக் கடவையில் தொடரும் முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய அவசர கால நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.
இந்த நடவடிக்கை மூலம், எதிர்ப்பாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என Ford அறிவித்தார்.
காவல்துறைக்கு மாகாண அரசாங்கம் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் என இன்றைய செய்தியாளர் சந்திப்பில் Ford கூறினார்.
நடவடிக்கைகள் தற்காலிகமானவை என கூறிய முதல்வர், அவற்றை சட்டத்தில் நிரந்தரமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அவசரகால பிரகடனம் 42 மணி நேரம் நீடிக்கும்.
சனிக்கிழமை கூடவுள்ள அமைச்சரவை இந்த கால எல்லையை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது