தேசியம்
செய்திகள்

சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் Trudeau

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் எதிர்ப்பு போராட்டம்  விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Trudeau தெரிவித்தார்.

ஆனாலும் வன்முறை விளைவுகள் குறித்த சாத்தியக் கூறுகளை  மேற்கோள் காட்டி, எப்படி அல்லது எப்போது ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றிய விபரங்களை பிரதமர் வெளியிடவில்லை.

அதேவேளை கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை போக்கு வரத்து தடைகள் தொடர அனுமதிக்க முடியாது எனவும் Trudeau தெரிவித்தார்

இந்த விடயம் குறித்து வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுக்கும் பிரதமர் Trudeauவுக்கும் இடையில் உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.

Related posts

உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும்: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற இலையுதிர் கால அமர்வு ஆரம்பமானது!

Lankathas Pathmanathan

Leave a Comment