Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கனடாவிடம் Michigan governor அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவிற்குள் வரும் அமெரிக்க போக்குவரத்தை தடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த இன்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் Detroit நகரையும் கனடாவின் Windsor நகரையும் இணைக்கும் Ambassador பாலத்தில் தொடரும் போராட்டம் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் COVID தடுப்பூசி ஆணைகளை நிறுத்தக் கோரி தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
Ambassador பாலம் கனடாவில் உள்ள முக்கிய சர்வதேச நில எல்லை கடப்புகளில் ஒன்றாகும்.