தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் Pierre Poilievre

Conservative கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டி ஆரம்பித்துள்ளது.

Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து Erin O’Toole கடந்த புதன்கிழமை விலகியதை தொடர்ந்து இடைக்கால தலைவராக Candice Bergen நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நிரந்தர தலைவருக்கான போட்டியில் ஈடுபடும் ஆர்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் Pierre Poilievre சனிக்கிழமை (05) வெளியிட்டார்.

கனடாவின் அடுத்த பிரதமராக போட்டியிடுவதாக அறிவித்ததன் மூலம் Conservative கட்சியின் தலைமைக்காக போட்டியில் ஆர்வத்தை Poilievre அறிவித்தார்.

O’Toole மூன்று நாட்களுக்கு முன்னர் தலைமை பதவியில் இருந்து வெளியேற்றிய பின்னர், கட்சியின் உயர்மட்ட பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்த முதல் வேட்பாளர் Poilievre ஆவார்.

Ottawa தொகுதியின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினரான Poilievre, இந்த போட்டியில் ஒரு இயல்பான முன்னோடியாக கருதப்படுகின்றார்.

Related posts

Fairview Mall துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan

குடும்பங்களை இலக்காகக் கொண்ட மூன்று அம்ச திட்ட சட்டமூலம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment