December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்

கனடாவில் COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  Alberta, Saskatchewan ஆகிய மாகாணங்கள் முன்னணி வகிக்கின்றன.
பொது சுகாதார நடவடிக்கைகளை கொண்டிருப்பதற்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இடையே மாகாணங்கள் சமநிலையைக் கண்டறிய வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில் பல மாகாணங்கள் சில சுகாதாரக் கட்டுப்பாடுகளை நீக்கிவிடுவது குறித்த சமிக்ஞைகளை வெளியிடுகின்றன.

Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை நிறுத்துவதற்கான திகதியை அடுத்த வாரம் தனது அரசாங்கம் அறிவிக்கும் என முதல்வர் Jason Kenney கூறினார்.

அனைத்து  கட்டுப்பாடுகளையும் விரைவில் முடிவுக்கு கொண்டுவர உறுதிபூண்டு இருப்பதாக Saskatchewan முதல்வர் Scott Moe தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் Ontario, Quebec ஆகிய மாகாணங்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன..

ஆனாலும் இந்த இரண்டு மாகாணங்களிலும் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Newfoundland and Labradorரில் முன்னெடுக்கப்படும் எந்த மாற்றமும் எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என முதல்வர் Andrew Furey கூறினார்

Related posts

கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைகிறது

Lankathas Pathmanathan

இரண்டு வருடங்களில் Calgary விடுதியில் $26.8 மில்லியன் டொலர்கள் தனிமைப்படுத்தலுக்கு செலவு

Lankathas Pathmanathan

Leave a Comment