Ottawaவில் வார விடுமுறையில் நடைபெற்ற பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
வார இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டதாக Ottawa காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (01) இரவு அறிவித்தனர்.
சொத்துக்களுக்கு தீங்கு விளைவித்ததாக 29 வயதான Ottawaவைச் சேர்ந்த ஒருவர் சனிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டார். இந்த சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
ஞாயிற்றுக்கிழமை, 37 வயதான Ottawa நபர் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஆயுதம் ஏந்தி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அந்த ஆயுதம் என்ன என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
13 விசாரணைகள் நடைபெற்று வருவதாக Ottawa காவல்துறை ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பார வண்டி ஓட்டுனர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாக தலைநகர் Ottawaவில் தொடர்கிறது