கட்சி தலைமை குறித்த இரகசிய வாக்களிப்பை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole புதன்கிழமை (02) எதிர் கொள்ளவுள்ளார்.
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதன் கலந்து கொள்கின்றனர்.
அந்த கூட்டத்தில் தலைமை குறித்த வாக்களிப்பு நடைபெறும் என தெரியவருகின்றது.
O’Tooleலின் தலைமை குறித்த வாக்களிப்பை வலியுறுத்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
35 Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் Conservative கட்சியின் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதை விவரிக்கும் அறிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் தலைமை குறித்த மதிப்பாய்வு கோரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்வதற்கு போராடத் தயாராக இருப்பதாக O’Toole கூறியுள்ளார்.
இது கட்சியில் ஏற்பட்டுள்ள விரிசல் என கூறும் O’Toole, Conservative கட்சிக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன என குறிப்பிடுகின்றார்.
இந்த வாக்களிப்பின் முடிவை ஏற்றுக் கொள்வதாக O’Toole கூறியுள்ளார்.
இந்த வாக்களிப்பின் O’Toole தோல்வியடைந்தால், Conservative கட்சி ஆறு ஆண்டுகளில் மூன்றாவது தலைமைப் போட்டியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.