COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்க புதிய மசோதாவை Liberal அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2.5 பில்லியன் மதிப்புள்ள இந்த மசோதாவை Liberal அரசாங்கம் திங்கட்கிழமை (31) அறிமுகப்படுத்தியுள்ளது.
Bill C-10 என்ற இந்த மசோதா நாடு முழுவதும் 2.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் Health கனடாவிற்கு அதிகாரத்தை வழங்குகிறது
நாடு முழுவதும் உள்ள COVID சோதனைத் தேவைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த மசோதா அமையும் என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.
Liberal அரசாங்கம் தமது December பொருளாதார அறிக்கையில் விரைவு antigen சோதனைக்காக 1.7 பில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.