கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள எதிர்ப்பாளர்கள் பலர் Ottawaவை சென்றடைந்துள்ளனர்.
Ottawa நோக்கி அணிவகுக்கும் சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய போராட்டம் கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை காலை ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பாளர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த, உள்ளூர் காவல்துறை ஏனைய நகரங்களிலிருந்து உதவியை அழைத்துள்ளது என Ottawa காவல்துறைத் தலைவர் Peter Sloly வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
நாடு முழுவதும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்விற்கு தயாராவதற்கு RCMP உட்பட மாகாண, தேசிய முகவர்களுடன் உள்ளூர் காவல்துறை இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.