வார இறுதிக்கு முன்னதாக நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக Ontario, Quebec ஆகிய மாகாணங்களில் மிக உயர்ந்த எரிவாயு விலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தெற்கு Ontario, Quebecகின் பெரும்பாலான நகரங்களில் வெள்ளிக்கிழமை (28) லிட்டருக்கு இரண்டு சதங்களால் எரிவாயு விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Montrealலில், ஒரு லிட்டர் எரிவாயு 161.9 சதத்தை எட்டும்.
Toronto பெரும்பாகத்தில், எரிவாயு விலை லிட்டருக்கு 151.9 சதத்தை எட்டும்.
இதன் மூலம் Toronto பெரும்பாகத்தில் ஒரு டொலர் ஐம்பது சதத்தை எரிவாயு விலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.