கனடாவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள குழந்தைகள் மூன்றாவது COVID தடுப்பூசியை பெற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
NACI எனப்படும் கனடாவின் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை வெளியிட்டது.
கனடா இப்போது தொற்றின் ஐந்தாவது அலையில் உள்ளது என செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் NACI தெரிவித்தது.
இது மிகவும் பரவக்கூடிய Omicron மாறுபாட்டால் இயக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
COVID தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளின் ஆபத்து குறைவாக உள்ளது என NACI கூறுகிறது,
ஆனாலும் தொற்றின் விளைவாக தீவிர அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நோய் தடுப்புக்கான ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டுகிறது.