தேசியம்
செய்திகள்

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான கனடியர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான அமைச்சு சனிக்கிழமை (22) வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவத்தில் மூவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபரின் படங்களை மாநில பாதுகாப்பு செயலாளர் Lucio Hernández Gutiérrez வெளியிட்டார்.

தனியுரிமை காரணமாக பலியான கனடியர்கள் குறித்த மேலதிக எந்த தகவலையும் வெளியிட முடியாது என உலகளாவிய விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்தது.

Related posts

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Torontoவில் கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment