COVID கட்டுப்பாடுகளை நீக்கப்போவதில்லை என Québec முதல்வர் François Legault தெரிவித்தார்.
தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் பொது மக்களை பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை அவர் வலியுறுத்தினார்.
ஆனால் தொற்றுகளின் பரவலைக் குறைக்கும் நோக்கில் மேலும் எந்த கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதில்லை என முதல்வர் கூறினார்.
3,411 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (20) Quebec சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களில் 285 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.