கனடாவில் பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தின் வருடாந்திர வேகம் Decemberரில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.
Decemberரில் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டை விட 4.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.
1991ஆம் ஆண்டின் பின்னர் கனடாவின் அதி உயர்ந்த புள்ளி வீதம் இதுவாகும்.
Decemberரில் விலை வளர்ச்சியின் வேகமான அதிகரிப்புக்கு உணவு, பயணிகள் வாகனங்கள், வீட்டு விலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.