சிறிய எண்ணிக்கையிலான கனேடிய சிறப்புப் படையினர் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
உக்ரைனில் உள்ள கனடிய சிறப்புப் படையினர், தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவார்கள் என கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly கூறினார்.
திங்கட்கிழமை அமைச்சர் Joly, உக்ரைன் பிரதமர் Denys Shmyhal சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ரஷ்யாவிடமிருந்து உக்ரைனின் இறையாண்மைக்கான கனடாவின் ஆதரவை அமைச்சர் Joly உறுதிப்படுத்தினார்.
உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு அமைதியான தீர்வு, ஸ்திரத் தன்மையை பேணுவதற்கும் பிராந்தியம் முழுவதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவசியமானது என Joly தெரிவித்தார் .
உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களை மத்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது .