Saskatchewan முதல்வர் Scott Moeக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைவு antigen சோதனையில் முதல்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை(13) அறிவித்தார்.
கடந்த 48 மணி நேரத்தில் Moeவின் நெருங்கிய தொடர்புகள் அனைவருக்கும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதல்வருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை எனவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
அடுத்த ஐந்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலிருந்து தனக்கான கடமைகளை ஆற்றவுள்ளதாகவும் Moe, Twitter மூலம் அறிவித்தார்.