தேசியம்
செய்திகள்

CEBA கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு 2023 வரை நீட்டிப்பு

வணிகங்களுக்கான CEBA வட்டியில்லா கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை கனடிய அரசாங்கம் 2023 வரை நீட்டிக்கிறது.

CEBA எனப்படும் கனடா அவசர வணிக கணக்கு திட்டத்தில் இருந்து பெறப்பட்ட வட்டியில்லா கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு வரை மத்திய அரசு நீட்டிக்கிறது.

இந்த ஆண்டு December 31ஆம் திகதியாக இருந்த காலக்கெடு, 2023ஆம் ஆண்டின் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது என சிறு வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் Mary Ng கூறினார்.

COVID தொற்றின் ஆரம்பத்தின் போது அறிமுகமான CEBA திட்டம் சிறு வணிகங்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரை வட்டியில்லா கடன்களை வழங்கியது.

இதன் மூலம் 898 ஆயிரத்திற்கும் அதிகமான கனேடிய வணிகங்கள் நிதி பெற்றனர்.

December 31, 2023 அல்லது அதற்கு முன் கடனின் மீதியை திருப்பிச் செலுத்தினால் 33 சதவீதம் அல்லது 20 ஆயிரம் டொலர்கள் வரை மீள செலுத்த தேவையில்லை என அரசாங்கம் கூறுகிறது.

நிலுவையில் உள்ள கடன்கள், January 1, 2024 முதல் ஆண்டுக்கு ஐந்து சதவீத வட்டியுடன் இரண்டாண்டு கால கடன்களாக மாற்றப்படும்.

இந்த கடன் December 31, 2025க்குள் முழுமையாக மீள செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan

காட்டுத்தீ மேலும் சில மாதங்கள் தொடரும்?

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் உள் சச்சரவுகள் தற்காலிகமானவை: தலைவி Paul

Gaya Raja

Leave a Comment