தேசியம்
செய்திகள்

இந்த வாரம் 250 ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடா வருகை

கடந்த July மாதத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்களின் முதல் விமானத்தை கனடா வரவேற்றது.

ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் கனடாவுக்கு வர உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்த ஆறு மாதங்களுக்குப் பின்னர், முதல் விமானம் தரையிறங்கியுள்ளது.

திங்கட்கிழமை 250 ஆப்கானிஸ்தான் அகதிகள் வருகை தந்ததாக குடிவரவு அமைச்சர் Sean Fraser அறிவித்தார்.

இவர்களில் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான சிறப்புத் திட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட முதல் 170 பேரும் அடங்குகின்றனர்.

கனடாவில் இதுவரை சுமார் 6,750 ஆப்கானிஸ்தான் அகதிகள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

Liberal அரசாங்கம் 40 ஆயிரம் ஆப்கானிய அகதிகளை கனடாவில் குடியமர்த்துவதாக உறுதியளித்துள்ளது.

Related posts

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனடியர்கள் பலி: கனடிய வெளிவிவகார அமைச்சு!

Gaya Raja

அடுத்த மாதத்தில் தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை $2.20 தாண்டும்

Lankathas Pathmanathan

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment