Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை ஆதரிப்பதாக Peel பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Lawrence Loh தெரிவித்தார்.
தேசியம் சஞ்சிகைக்கு, Good Evening Canada ஆகிய ஊடகங்களுக்கு வழங்கிய பிரதியேக செவ்வியின் போது Dr. Loh இந்த கருத்தை தெரிவித்தார்.
தடுப்பூசியை அதிக எண்ணிக்கையானவர்கள் பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் பாடசாலைகள் திரும்புவது சரியான முடிவு என அவர் கூறினார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது பாதுகாப்பானது என Dr.Loh தனது உரையாடலின் போது குறிப்பிட்டார்.
COVID தொற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரு தடுப்பூசி மூலம் கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் எனவும் Dr.Loh வலியுறுத்தினார்.