கனடாவில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடந்தும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுக்களின் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன .
திங்கட்கிழமை மாத்திரம் 33 ஆயிரத்து 483 தொற்றுக்களை கனடிய சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதுவரை 2 மில்லியன் 595 ஆயிரத்து 280 தொற்றுகள் கனடாவில் பதிவாகின.
இவர்களில் 2 மில்லியன் 160 ஆயிரத்து 557 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
திங்கட்கிழமை வரை சுகாதார அதிகாரிகளால் 30 ஆயிரத்து 863 மரணங்களும் கனடாவில் பதிவாகின.
ஆனாலும் தற்போது பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக மதிப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இலேசான தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்கள் PCR பரிசோதனையை நாட வேண்டாம் என பல மாகாணங்கள் அறிவித்துள்ள நிலையில் பதிவாகும் எண்ணிக்கை குறைவான மதிப்பீடு என கூறப்படுகிறது.