COVID தொற்றின் பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் விகிதங்கள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam கூறினார்.
வெள்ளிக்கிழ்மை (07) நடைபெற்ற COVID பதில் நடவடிக்கை குறித்த மத்திய அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
Omicron இப்போது முக்கிய COVID மாறுபாடாக நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் சராசரி தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இந்த வாரம் 65 சதவீதம் அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 91 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும் கடுமையான நோய்கள் அதே எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை என Dr. Theresa Tam தெரிவித்தார்.
January மாதம் 5ஆம் திகதியுடன் கடந்த ஏழு நாட்களில் சராசரியாக தினசரி 42,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
தற்போது கனடாவில், சராசரியாக 3,650 பேர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் எண்ணிக்கை ஏற்கனவே மூன்றாவது அலையின் உச்சத்தை விட 400 சதவீதம் அதிகமாக உள்ளதாக Tam கூறினார்.