Quebecகில் வியாழக்கிழமை (06) 26 COVID தொடர்புள்ள மரணங்களும் 15,874 புதிய தொற்றாளர்களும் பதிவானார்கள்.
20 மரணங்களும் 13,339 புதிய தொற்றாளர்களும் Ontarioவில் பதிவாகினர்
Alberta 4,869 புதிய தொற்றாளர்களுடன் 3 மரணங்களை பதிவு செய்தது.
British Columbia சுகாதார அதிகாரிகள் 3,223 தொற்றுகளையும் 3 மரணங்களையும் அறிவித்தனர்.
Manitobaவில் சுகாதார அதிகாரிகளால் 6 மரணங்களும் 2,548 புதிய தொற்றாளர்களும் பதிவு செய்யப்பட்டனர்
Saskatchewanனில் 913 தொற்றுகள், Nova Scotiaவில் 745 தொற்றுகள், New Brunswickகில் 672 தொற்றுகளும் ஒரு மரணமும், Newfoundland and Labradorரில் 503, Prince Edward தீவில் 204, Northwest பிராந்தியத்தில் 157, Yukonனில் 74, Nunavutரில் 21 என தொற்றுகளும் பதிவாகின.
நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் சுகாதார அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்டன.
இலேசான தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்கள் PCR பரிசோதனையை நாட வேண்டாம் என பல மாகாணங்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவான மதிப்பீடு என கூறப்படுகிறது.