Ontario, Quebec மாகாணங்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
Ontarioவில் 2,279, Quebecகில் 1,953 என தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (06) பதிவாகியுள்ளது.
இவர்களில் Ontarioவில் 319, Quebecகில் 207 பேர் மாகாண ரீதியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்
Ontarioவில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள COVID தொடர்பான நோயாளிகளின் ஏழு நாள் சராசரி 252 என சுகாதார அமைச்சர் Christine Elliot தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பல நாட்களாக, மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.