கனடாவில் புதன்கிழமையுடன் (05) இரண்டு மில்லியன் பேர் COVID தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தொடந்தும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை இரண்டு மில்லியனைக் கடந்தது.
புதன்கிழமை மாத்திரம் நாடளாவிய ரீதியில் 39 ஆயிரத்து 363 புதிய தொற்றுகள் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன.
செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 250 ஆக பதிவாகியிருந்தது.
புதன்கிழமை வரை தொற்றின் காரணமாக 30 ஆயிரத்து 524 பேர் கனடாவில் மரணமடைந்துள்ளனர்