தேசியம்
செய்திகள்

கனடாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை எச்சரிக்கை

கனடாவில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் பிரதேசமும் இந்த வாரம் கடுமையான குளிர் நிலை அல்லது பனிப்பொழிவுக்கு குறைந்தபட்சம் ஒரு வானிலை எச்சரிக்கையை எதிர்கொள்கிறது.
சுற்றுச்சூழல் கனடா இந்த தகவலை வெளியிட்டது.
தவிரவும் Prince Edward தீவைத் தவிர, அனைத்து மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பு எச்சரிக்கை அல்லது வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ontarioவின் தெற்கு பிராந்தியங்களுக்கு காற்று எச்சரிக்கைகளும், மாகாணத்தின் வடக்குப் பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு Quebec பகுதிக்கு பனிப்புயல் எச்சரிக்கையும், கிழக்குப் பகுதிக்கு கணிசமான அளவு பனிப்பொழிவு எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
British Columbiaவின் அனைத்து பகுதிகளிலும் குளிர்கால புயல், பனிப்பொழிவு, கடுமையான குளிர் எச்சரிக்கைகள் உள்ளன.

Atlantic கனடாவில் New Brunswick, Newfoundland and Labrador  மாகாணங்களுக்கு பனிப்பொழிவு, மழைப்பொழிவு எச்சரிக்கையும், Prince Edward தீவு, Nova Scotiaவின் சில பகுதிகளில் சிறப்பு வானிலை அறிக்கைகளும்  வெளியிடப்பட்டுள்ளன.

Yukon, Northwest Territories, Nunavut பிராந்தியங்கள் கடுமையான குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன

Related posts

இரண்டு கனடியர்கள் இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் மரணம்

Gaya Raja

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

Lankathas Pathmanathan

Ontarioவில் நடைமுறைக்கு வந்துள்ள தடுப்பூசி சான்றிதழ் பாவனை!

Gaya Raja

Leave a Comment