தமிழ் சமூக மையம் இப்பொழுது கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கொடை நிறுவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சமூக மையமானது கனடா வருமான முகவாண்மையால் அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைப் தமிழ் சமூக மையத்தின் இயக்குனர் சபை வெளியிட்டது.
கடந்த ஒரு வருட காலமாக இயக்குனர் சபையானது இதற்கான விண்ணப்பம் தொடர்பான பணிகளை மேற்கொண்டுவந்துள்ளதாக புதன்கிழமை (05) வெளியான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அறக்கொடை நிறுவனமென்ற நிலை வரிவிலக்குப் பெறுவது உட்பட, பல நன்மைகளை தமிழ் சமூக மையத்திற்கும், குமுகத்திற்கும் வழங்குகிறது.
தமிழ் சமூக மையம் கடந்த ஆண்டில் 26.3 மில்லியன் டொலர்கள் அரச நிதியுதவி பெற்றும், வடிவமைப்புக்கு முந்திய ஆய்வை வெளியிட்டும் முன்னேற்றங்களைக் கண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.