முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு தொடர்பான 40 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை கனடிய அரசாங்கம் வெளியிட்டது.
நிதியில்லாத குழந்தைகள் நல அமைப்பால் பாதிக்கப்படும் முதற்குடியினர் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, அரசாங்கம் 40 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை கொள்கை அடிப்படையில் எட்டியுள்ளது.
கனேடிய வரலாற்றில் இது மிகப்பெரிய ஒப்பந்தம் என சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller கூறினார்.
முதற்குடியினர் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் 20 பில்லியன் டொலர்களை ஒதுக்குகிறது.
மேலும் 20 பில்லியன் டொலர்கள் முதற்குடியினர் குழந்தைகளுக்கான நிதி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைச் சவாலை முடிவுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகின்றது.