COVID தொற்றின் தொடர்ந்த பரவல் காரணமாக கனடாவின் தொலைதூர சமூகங்கள் பல வெளியாட்களை தடை செய்கின்றன.
தொற்றின் அண்மைய அதிகரிப்பு கனடாவில் உள்ள சில தொலைதூர சமூகங்களின் சுகாதாரப் பாதுகாப்பு வளங்களை அச்சுறுத்தல் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
அண்மைய நாட்களில் தெற்கு கனடாவின் பெரும்பகுதிகளில் அதிகரித்த தொற்றுகள் பதிவு செய்யப்படுகின்றன.
பல மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் நோய் வாய்ப்பட்டிருப்பதால், பெரும் சவால்கள் எதிர் கொள்ளப்படுகின்றன.
சுகாதாரப் பாதுகாப்புக்கான வளங்கள் ஏற்கனவே மிகவும் குறைவாக இருக்கும் தொலைதூர சமூகங்களில் அந்த சவால் அதிகமாகவே உள்ளது.
Ontario, Nunavut, வடக்கு Quebec, Labrador உள்ளிட்ட தொலைதூர சமூகங்களில் தொற்றின் அதிகரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் இரத்துச் செய்துள்ளதுடன் பல சமூகங்களுக்கு உள்ளும் வெளியும் அத்தியாவசியமற்ற பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் சில முதற்குடியினர் சமூகங்களில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Ontarioவில் உள்ள Bearskin Lake முதற்குடியிருப்பு தொற்றின் காரணமாக இராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளது.
இதுபோன்ற பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ தயாராக உள்ளதாக சுதேச சேவைகள் அமைச்சர் Patty Hajdu தெரிவித்தார்.