2021ஆம் ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை Quebec சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றுக்களை பதிவு செய்தது.
Quebecகில் 16,461 தொற்றுகளுடன்13 மரணங்களை வெள்ளிக்கிழமை (31) சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதன் மூலம் தொற்றின் ஆரம்பத்தில் இருந்து Quebecகில் 603,068 தொற்றுகளும் 11,724 மரணங்களும் பதிவாகியுள்ளன.
Quebec வைத்தியசாலைகளில் தொற்றின் காரணமாக 1,063 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 151 பேர் அவரச சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
வியாழக்கிழமை வரை ஐந்து வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள மக்கள் தொகையில் 89 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியையும் 82 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
COVID தொற்றின் விகிதங்கள் அதிகரித்து வருவதால் Quebec மாகாணம் வெள்ளிக்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது
வெள்ளிக்கிழமை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை Quebec மாகாணம் அமுல்படுத்துகின்றது.