தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இன்று அறிவிக்கப்பட்டது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் நோயறிதலை உறுதிப்படுத்த PCR பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை எனவும் ஐந்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது .
தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள், நீண்ட கால மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைக் கவனிப்பவர்கள் போன்ற முன்னுரிமை மக்களுக்கும் PCR சோதனை தொடர்ந்தும் பரிந்துரைக்கப்படுகிறது.
Saskatchewan சுகாதார ஆணையத்தின் சோதனைத் தளங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சி இது என முதல்வர் Scott Moe கூறினார்.