COVID தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர் Justin Trudeau உள்ளார்.
பிரதமர் அலுவலக ஊழியர்களில் மூவருக்கும் அவரது பாதுகாப்பு பிரிவின் மூவருக்கும் COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் புதன்கிழமை (22) நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.
ஆனாலும் இதுவரையிலும் தான் தொற்றுக்கு எதிர்மறையாக பரிசோதித்துள்ளதாக பிரதமர் கூறினார்.
பொது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதால் செய்தியாளர் சந்திப்புகளை மெய்நிகர் நிகழ்வுகளாக நடத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பொது சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலை பின்பற்றி சுய கண்காணிப்பு மற்றும் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வதாக Trudeau கூறினார்.
தொடர்ந்து அனைத்து பொது சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றவுள்ளதாகவும் Trudeau உறுதிப்படுத்தினார்.
பிரதமரின் மனைவியின் இங்கிலாந்திக்கான பயணத்தை தொடர்ந்து COVID தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்த நிலையில் Trudeau March 2020இல் சுய-தனிமையில் பல வாரங்களைக் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது