COVID தொற்றுக்கான புதிய அதிக ஒற்றை நாள் எண்ணிக்கையை புதன்கிழமை (22) கனடா பதிவு செய்தது.
கனடாவில் புதன்கிழமை 15 ஆயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவாகின.
நாடளாவிய ரீதியில் 14,934 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்
தொற்றின் ஆரம்பத்தில் இருந்து அரை மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்களை Quebec பதிவு செய்தது.
Quebec மாகாணம் 6,361 புதிய தொற்றுகளை பதிவு செய்தது.
இதன் மூலம் Quebecகில் 6.25 சதவீதமானவர்கள் அல்லது 16 பேரில் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
Quebecகில் இன்று மேலும் இரண்டு மரணங்கள் பதிவானதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முப்பதினால் உயர்ந்தது.
Ontario கடந்த April மாத இறுதியின் பின்னர் புதன்கிழமை அதிக எண்ணிக்கையில் தொற்றுக்களை பதிவு செய்தது.
4,383 புதிய தொற்றுகளும் 10 மரணங்களும் Ontario சுகாதார அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்டன.
Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 3,5203 ஆக உள்ளது.
இது முந்தைய வாரத்தில் 1,514ஆக இருந்தது.
British Columbiaவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதி கூடிய தொற்றுகளின் எண்ணிக்கை பதிவானது.
அங்கு 1,474 புதிய தொற்றுகளும் ஆறு மரணங்களும் பதிவு செய்யப்பட்டன.
Albertaவில் 1,346 தொற்றுகளும் ஐந்து மரணங்களும் பதிவாகின.
Nova Scotia 537 தொற்றுக்கள் ஒரு மரணம், Manitobaவில் 400 தொற்றுக்கள் இரண்டு மரணங்கள், New Brunswickகில் 237 தொற்றுக்கள் ஒரு மரணம், Saskatchewanவில் 105 தொற்றுக்கள் ஒரு மரணம் என அறிவிக்கப்பட்டன.
கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி செவ்வாய்க்கிழமை (21) கனடா முழுவதும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவாகின.
January நடுப்பகுதியில் நாடளாவிய ரீதியில் தினசரி தொற்றின் எண்ணிக்கை 26 ஆயிரம் வரை எட்டக்கூடும் என சுகாதார அதிகாரிகள் கணித்துள்ளனர்.