கனடா திரும்பும் பயணிகள் PCR சோதனை முடிவுகளை வழங்க வேண்டிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களில் இருந்து கனடா திரும்புபவர்கள் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கு எதிர்மறையான PCR COVID சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவுக்குப் பின்னர் , மத்திய அரசின் இந்த முன் வருகை சோதனைக் கொள்கை அமலுக்கு வந்தது.
இது கனடாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் PCR மூலக்கூறு சோதனையை கட்டாயமாக்குகிறது
Omicron திரிபின் தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos இந்த நடைமுறையை அறிவித்தார்.
கடந்த புதன்கிழமை, அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு மத்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையை கனடியர்களுக்கு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.