புதிய கட்டுப்பாடுகளை மாகாணங்கள் மீண்டும் அறிவிக்கும் நிலையில் கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
கனடா திங்களன்று (20) 10,450 புதிய தொற்றுகளையும் 13 இறப்புகளையும் பதிவு செய்தது.
Quebec மாகாணம் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை திங்களன்று பதிவு செய்தது.
Ontario புதிய மரணங்கள் எதனையும் பதியாத போதிலும் 3,784 தொற்றுக்களை திங்களன்று பதிவு செய்தது.
Ontarioவில் பதிவாகும் புதிய தொற்றுகளில் குறைந்தது 83 சதவீதம் இப்போது Omicron திரிபு ஆகும்.
இந்த எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை 50 சதவீதமாக இருந்தது.
British Columbia வார இறுதியில் புதிய தொற்றுகளில் அதிகரிப்பை கண்டது.
மூன்று நாட்களில் 2,550 புதிய தொற்றுகளும் மூன்று இறப்புகளும் அங்கு பதிவானது.
அவற்றில், 807 புதிய தொற்றுகள் திங்கள்கிழமை பதிவானவையாகும்.
Alberta வார இறுதியில் 1,925 புதிய தொற்றுகளையும் ஆறு மரணங்களையும் அறிவித்தது.
இவற்றில் 1,045 Omicron திரிபு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவற்றில், 577 புதிய தொற்றுகள் திங்கள்கிழமை பதிவானவையாகும்.