Omicron பரவலை கட்டுப்படுத்த Ontario மாகாணம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
Ontarioவின் COVID science table எனப்படும் தொற்றுக்கான அறிவியல் மதியுரைஞர்கள் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டனர்.
இவர்களின் modelling தரவுகளின் படி, Omicron இந்த வாரம் Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாற உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் வாரங்களில் வைத்தியசாலைகளில் தொற்றாளர்களை கையாள்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றும் என எச்சரிக்கப்படுகிறது.
குறிப்பாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவுகளில் பாரிய இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை காணப்படுவதாக அறிவியல் மதியுரைஞர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு மாகாண அரசாங்கம் தேவையான சுகாதார ஒழுக்க நெறிமுறைகளை அமுல்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
Ontarioவில் இந்த மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் தொற்றுகள் வரை பதிவாகலாம் என நேற்று எச்சரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.