தேசியம்
செய்திகள்

காலாவதியாக உள்ள தடுப்பூசியை வீணாக்க வேண்டாம்: மத்திய அரசு மாகாணங்களிடம் கோரிக்கை

அடுத்த சில நாட்களில் காலாவதியாக உள்ள ஆயிரக்கணக்கான AstraZeneca  தடுப்பூசியை வீணாக்க வேண்டாம் என மத்திய அரசு மாகாணங்களை வலியுறுத்துகிறது.

மாகாண, பிராந்திய சுகாதார அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய சுகாதார அமைச்சர் Patty Hajdu இந்த கோரிக்கையை முன் வைத்தார். இந்த மாத இறுதிக்குள் காலாவதியாக உள்ள தடுப்பூசிகளை உபயோகிக்க முடியாத மாகாணங்களும் பிராந்தியங்களும் அவற்றை பயன்படுத்த கூடிய மாகாணங்களுக்கு வழங்கி உதவுமாறு அமைச்சர் Hajdu ஊக்கமளித்தார்.

இந்த தடுப்பூசிகள் வீணடிக்க படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் வழங்குகிறார்.

ஒரு மாகாணம் அல்லது பிரதேசம் காலாவதி திகதிக்கு முன்னர் அனைத்து தடுப்பூசிகளையும் பயன்படுத்த முடியாது என்ற நிலையில், அவற்றை நாட்டில் வேறு இடங்களுக்கு மாற்ற கனடாவின் பொது சுகாதார நிறுவனம் உதவ முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May

Lankathas Pathmanathan

அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட Ontario முடிவு

Leave a Comment