தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற தமிழர்

கனடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார்.

The Hill Times எனப்படும் சுயாதீனமான கனேடிய அரசியல் செய்தி பத்திரிகையின் 18வது வருடாந்த சிறந்த பணியாளர்கள் பட்டியலில் இந்த கௌரவத்தை கௌதமன் குருசாமி பெற்று முத்திரை பதித்துள்ளார். 

சிறந்த 25 பணியாளர்களை பட்டியலிடும் The Hill Times பத்திரிகை, இந்த வருடம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த பணியாளர் (Top Overall terrific staffer),  சிறந்த சகலதுறை பணியாளர் (Best AllRound Terrific staffer), அமைச்சரவையின் சிறந்த பணியாளர் (Best Cabinet staffer) ஆகிய பிரிவுகளில் கௌதமன் குருசாமிக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.

அத்துடன்  அதிக விவரங்களை அறிந்த பணியாளர் (Most Knowledgeable staffer) என்ற பிரிவில் முதலிடத்தை சமநிலையில் கௌதமன் குருசாமி பகிர்ந்துள்ளார். இவர் தற்போது கனடிய சுகாதார அமைச்சரின் மூத்த கொள்கை ஆலோசகராக (Senior policy adviser for Health Minister Patty Hajdu) பணியாற்றுகின்றார்.

தொழில்முறை அரசியல் பணியாளராக ஆறு வருடங்கள் மட்டுமே பணியாற்றியுள்ள கௌதமன் குருசாமி, 2015 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் நிறைவேற்று உதவியாளராக அரசியலில் பணியாற்ற ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

இரசாயன ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்

Gaya Raja

இந்த வாரத்துடன் 30 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

Leave a Comment