Quebec அரசாங்கம் தொடர்ச்சியான புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
நாளை குறைந்தது 3,700 புதிய COVID தொற்றுக்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு Quebec மாகாணம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் பொது சுகாதார விதிகளை கடுமையாக்குகிறது.
முதல்வர் François Legault இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
தொற்றின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்கும் இலக்கை மாகாணம் கொண்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.
Quebec மாகாணத்தில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் திறக்கப்படுவதும் தாமதமாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த தாமதம் உயர்நிலைப் பாடசாலைகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் ஆரம்ப பாடசாலைகள் வழமையான திகதியில் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.