30 ஆயிரம் COVID தொடர்பான இறப்புகளுடன் கனடா கடுமையான மைல்கல்லை தாண்டியுள்ளது.
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் COVID தொற்று தொடங்கியதிலிருந்து கனடா அதன் 30 ஆயிரமாவது மரணத்தை வியாழக்கிழமை (16) பதிவு செய்துள்ளது.
பரவக்கூடிய தொற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க மத்திய அரசாங்கமும் சில மாகாணங்களும் பொது சுகாதார நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளன.
கனடாவில் 10 ஆயிரம் மரணம் தொற்றின் ஆரம்பத்தில் இருந்து ஒன்பது மாதங்களில் கடந்த வருடம் Novemberரில் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் January 2021இல் இந்த எண்ணிக்கை இருமடங்காகி 20 ஆயிரமாக உயர்ந்தது.
அதன் பின்னர் தடுப்பூசிகள் தினசரி தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
476 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை தடுப்பூசிகள் கனடாவில் இதுவரை காப்பாற்றி இருக்கலாம் என Toronto பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர் மதிப்பிடுகிறார்.
கடந்த வருடம் December மாதம் 14ஆம் திகதி கனடாவில் முதலாவது COVID தடுப்பூசி வழங்கப்பட்டது.
கனடாவின் மொத்த COVID இறப்புகளில் சுமார் 40 சதவீதம் January மாதத்தின் பின்னர் நிகழ்ந்துள்ளன.
இந்த இறப்புகளில் பெரும்பாலானவை தடுப்பூசி போடப்படாதவர்கள் மத்தியில் நிகழ்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வியாழக்கிழமையுடன் கனடாவில் 30,012 மரணங்கள் கனடாவில் அறிவிக்கப்பட்டன.