பிரதமர் Justin Trudeau தனது அமைச்சர்களுக்கான ஆணை கடிதங்களை வியாழக்கிழமை வெளியிட்டார்.
இந்த ஆணை கடிதங்களில் Liberal கட்சியின் தேர்தல் உறுதிமொழியை அவரது அமைச்சரவை எவ்வாறு நிறைவேற்றும் என அவர் எதிர்பார்க்கிறார் என்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.
பிரதமர் Trudeauவின் அமைச்சரவை October மாதம் 26ஆம் திகதி பதவியேற்றது.
இந்த அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த ஆணைக் கடிதங்கள் வழங்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், விடுமுறைக்காக ஒரு நாள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க சபை ஒப்புக்கொண்டது.