தேசியம்
செய்திகள்

Omicron பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாகாணங்கள்

பல மாகாணங்கள் Omicron திரிபின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.

Ontario

COVID booster ஊசிக்கான தகுதியை Ontario விரிவுபடுத்துகிறது.

திங்கட்கிழமை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு booster ஊசிக்கான தகுதியை Ontario விரிவுபடுத்துகிறது

Omicron திரிபு அதிகரித்து வருவதால், சில உள்ளரங்குகளுக்கான கட்டுப்பாடுகளையும் Ontario மாகாண அரசாங்கம் அறிவித்தது.

இரண்டாவது தடுப்பூசிக்கும் booster ஊசிக்கும் இடையே தேவையான இடைவெளியை ஆறு மாதங்களில் இருந்து மூன்று மாதங்களுக்கு குறைப்பதாகவும் அரசாங்கம்  அறிவித்தது.

December 18 உள்ளரங்க பொழுதுபோக்கு இடங்கள், சந்திப்பு மற்றும் நிகழ்வு இடங்கள், 1,000 பேருக்கும் அதிகமான உள்ளரங்கத் திறன் கொண்ட விளையாட்டு அரங்குகளுக்கு 50 சதவீத திறன் வரம்புகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆனாலும் Omicron பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாகாணத்தை முழுமையாக மூடுவது தீர்வாக அமையாது என செய்தியாளர் சந்திப்பில் Ontario முதல்வர் Doug Ford கூறினார்

Prince Edward Island

வெள்ளிக்கிழமை முதல் Prince Edward தீவுக்கு செல்லும்  எவரும் எதிர்மறையான COVID சோதனை முடிவுகளை பெறும் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மாகாணம் தலைமை சுகாதார அதிகாரி  Heather Morrison கூறினார்.

20 நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் உள்ளரங்க கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகளும்   நடைமுறைக்கு வருகிறது.

Quebec

Quebecகில் மாகாண அரசாங்கத்தின் வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் Christian Dubé செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

Quebec அரசாங்கம் booster ஊசிகளின் வழங்கல் வேகத்தை அதிகரிக்கவும், விரைவான COVID சோதனைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் விரும்புகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் Justin Trudeau மாகாண, பிராந்திய முதல்வர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போது Omicron திரிபை கட்டுப்படுத்த மிகவும் வலுவான நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன.

குழந்தைகள் உட்பட, முடிந்தவரை அதிகமான கனடியர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்வது என்ற விடயத்தில் முதல்வர்களுக்கும் பிரதமருக்கும் இடையில்  பரவலான உடன்பாடு காணப்பட்டது.

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு

Manitoba

விரைவான COVID சோதனைகளை பரவலாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய விரும்புகிறது என Manitoba முதல்வர் Heather Stefanson தெரிவித்தார்

Alberta

Alberta விரைவான COVID சோதனைகளை மிகவும் எளிதாகக் கிடைக்க வழி செய்கிறது.

50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் booster ஊசிக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது என முதல்வர் Jason Kenney அறிவித்தார்.

ஆனாலும் ஏனைய மாகாணங்களின் நகர்வுக்கு மாறாக உள்ளரங்க கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை Alberta தளர்த்துகிறது.

விடுமுறைக் காலத்திற்காக உள்ளரங்க கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக முதல்வர் Kenney கூறினார்.

Related posts

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த B.C. முதல்வர்

Lankathas Pathmanathan

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment