சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு

Omicron திரிபின் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. Justin Trudeau அரசாங்கம் அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கு எதிரான ஆலோசனையை புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Omicron திரிபின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசாங்கம் புதன்கிழமை புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட பயண நடவடிக்கைகளை அறிவிக்கும் என கூறப்படுகிறது. பெரும்பாலான COVID தொற்று காலத்தில் நடைமுறையில் இருந்த அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கு எதிரான ஆலோசனை October மாதம் நீக்கப்பட்டது. செவ்வாய்கிழமை மாலை பிரதமருக்கும் மாகாண, பிராந்திய முதல்வர்களுக்கும் இடையிலான தொலைபேசி சந்திப்பின்போது மிகவும் வலுவான நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில், அமெரிக்கா உட்பட கனடாவிற்குள் வரும் அனைத்து அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடையை அமல்படுத்தலாமா என்பதும் அடங்கியது. கனேடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் உட்பட, கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் பயணிகளுக்கான கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் அமுல்படுத்துதல் என்ற யோசனையும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இந்த விடயத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொற்றின் பரவலை குறைப்பதே இலக்கு என அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. மூன்றாம் தடுபூசியின் (third-dose booster shots) வழங்கலை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து முதல்வர்களுக்கும் பிரதமருக்கும் இடையே பரவலான உடன்பாடு இந்த உரையாடலில் இருந்தது. Download WordPress Themes FreePremium WordPress Themes DownloadFree Download WordPress ThemesDownload Premium WordPress Themes Freefree download udemy paid coursedownload karbonn firmwareFree Download WordPress Themesfree download udemy course