February 23, 2025
தேசியம்
செய்திகள்

வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்: Quebec சுகாதார அமைச்சர்

Quebecகில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறினார்.

COVID தொற்றுகளும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை Quebec சுகாதார அமைச்சர் Christian Dubé செவ்வாய்க்கிழமை (14) முன்வைத்தார்.

மாகாண அரசாங்கத்தின் வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என அமைச்சர் Dubé இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மாகாணத்தின் பொது சுகாதார இயக்குனர் வைத்தியர் Horacio Arruda, தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் தலைவர் Daniel Paré ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாதத்தில் பதிவான COVID தொற்றுகளில் தடுப்பூசி போடப்படாதவர்கள் அதிகமாக உள்ளதாக தரவுகள்  தெரிவிக்கிறது.

கடந்த 30 நாட்களில், Quebecகில் சுமார் 30,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் என சுகாதார அதிகாரிகள் கூறினர்.

செவ்வாய்க்கிழமை Quebec சுகாதார அதிகாரிகள் 1,747 புதிய COVID தொற்றுகளை பதிவு செய்தனர்.

மாகாணத்தின் Omicron திரிபின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக Quebecகின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது.

தவிரவும் மருத்துவமனையில் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Related posts

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் விவரங்களை எதிர்பார்க்கலாம்: பிரதமர்

Gaya Raja

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

Lankathas Pathmanathan

Leave a Comment