December 12, 2024
தேசியம்
செய்திகள்

இரண்டு வருடத்தில் 40 ஆயிரம் ஆப்கானியர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்: குடிவரவு அமைச்சர்

40,000 ஆப்கானியர்களை கனடாவுக்கு அழைத்து வருவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு வருட காலக்கெடுவை கனடிய குடிவரவு அமைச்சர் கணித்துள்ளார்.

40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை கனடாவுக்குக் அழைத்து வரும் வாக்குறுதியை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என அரசாங்கம் கணித்துள்ளதாக குடிவரவு அமைச்சர் Sean Fraser கூறினார்.

அகதிகள் வெளியேறிய ஆப்கானிஸ்தானிலும் பிற நாடுகளிலும் அரசாங்கம் சவால்களை எதிர்கொள்வதாக கூறிய அமைச்சர் அவர்களை அவசரமாக கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இந்த இரண்டு வருட காலக்கெடு ஒரு மதிப்பீடாகும் எனவும், வாரந்தோறும் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் கனடாவுக்கு வருகிறார்கள் எனவும் அமைச்சர் Fraser கூறினார்.

இப்போது கணிக்கப்பட்டதை விட வேகமான நடைமுறை திறன் உள்ளபோதிலும் பாதுகாப்பு நடைமுறையின் அவசியத்தை அமைச்சர் Fraser சுட்டிக் காட்டினார்

ஆனாலும் அரசாங்கத்தின் இந்த நீண்ட கால அவகாசத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

Related posts

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் இதுவரை ஐம்பது வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan

Leave a Comment