தேசியம்
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர்

Omicron தொற்றின் பரவல் தொடர்ந்தால் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை ஜனவரியில் நிறுத்த வாய்ப்பில்லை என Ontario சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (06) மாகாணசபையில் கேள்வி நேரத்தின் போது சுகாதார அமைச்சரும் துணை முதல்வருமான Christine Elliott இந்த தகவலை வெளியிட்டார்.

Omicron தொற்றின் திரிபு Deltaவை விட பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தினால், திட்டமிட்டபடி மாகாணத்தின் தடுப்பூசி கடவுசீட்டு முறை அடுத்த மாதம் நிறுத்தப்படாது என அவர் கூறினார்.

புதிய ஜனநாயக கட்சியின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், பல உட்புற பொது நடவடிக்கைகளை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டமிட்டபடி அடுத்த மாதம் மூடப்படாது என கூறினார்.

தற்போது Ontarioவில் நடைமுறையில் உள்ள தடுப்பூசி கடவுச்சீட்டு முறையும் உட்புறங்களில் முகமூடி அணியவேண்டிய உத்தரவுவும் அடுத்த வருடம் March இறுதிக்குள் முற்றிலும் காலாவதியாகிவிடும் என்பது இங்கு குறிபிடத்தக்கது.

Related posts

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan

பிற மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடனடியாக Ontarioவில் பணியாற்றக்கூடிய சட்ட மாற்றங்கள்

Lankathas Pathmanathan

Ontario மாகாண வரவு செலவு திட்டம் March 23 தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment