தேசியம்
செய்திகள்

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

கனடாவின் நீதித்துறை அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் நாடாளுமன்ற செயலாளராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற செயலாளர்கள் குழுவை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை அறிவித்தார். 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமனம் பெற்றனர். இவர்களில் Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் ஒருவராவார்

இந்த குழு அமைச்சர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே முக்கியமான இணைப்பாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பதவிக்கு பிரதமரினால் நியமிக்கப்பட்டதற்காக பெருமையடைவதாக ஹரி ஆனந்தசங்கரி ஒரு அறிக்கையில் கூறினார். இது ஒரு மகத்தான பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Washington பயணமாகும் Justin Trudeau!

Lankathas Pathmanathan

சில பொருட்களின் வரிகள் சனிக்கிழமை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Leave a Comment